இந்த உலகத்தில் நீ எதை இழந்தாலும்,
உன் பொறுமையை இழக்காதே.
காலத்தின் ஆற்றலை உணர்ந்து,
அதனிடம் சரணடைவாயாக.
காலம்,
கடவுளின் படைப்பில், மனிதன்
அறிய இயலா ஓர் மகாசக்தி.
இன்பதுன்பமென்னும் மாயையை
நொடிப்பொழுதில் மாற்ற வல்லது.
பல ஆயிரம் ஆண்டுகளாய் பூமியின்
அழுத்தத்தையும் வெப்பத்தையும் தாங்கி நிற்கும்
வைரம் போல் இரு.
வைரத்தின் மதிப்பு, காலம்
அதன் பொறுமைக்குத் தந்த பரிசு.
– பிரதீப்
True..! (y)
LikeLiked by 1 person